Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பரங்குன்றத்தில் 202 ஆவது முறையாக போட்டி – சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் !

Advertiesment
Padmarajan nominated his file in tiruparangundram
, வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (13:41 IST)
அதிக முறை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் என்ற பெருமையைக் கொண்ட சுயேட்சை வேட்பாளரான பத்மராஜன் 202 ஆவது முறையாக திருப்பரங்குன்றத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளார் சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன். இவர் இதுவரை 201 முறை சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் எனப் பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த இவர் 1988 முதல் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து விதமானத் தேர்தல்களிலும் பங்கேற்று வருகிறார். ஆனால் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்றதில்லை. மேலும் பல தேர்தல்களில் டெபாசிட் தொகையைக் கூட திரும்ப பெற்றதில்லை. இதுவரை இவர் தேர்தலுக்காக கட்டிய டெபாசிட் தொகையே 30 லட்சத்துக்கு மேல் இருக்கும் எனக் கூறுகிறார்.

ஜெயலலிதா, கருணாநிதி , மோடி, தேவகவுடா, அப்துல் கலாம், பிரனாப் முகர்ஜி ஆகிய முக்கியத் தலைவர்களையும் எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப முடிவு