Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போஸ்டர்களில் படம் இல்லை - எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டும் தினகரன்?

Webdunia
சனி, 11 மார்ச் 2017 (11:43 IST)
அதிமுக தொடர்பான விழாக்களில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தரப்பு ஓரங்கட்டி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின், அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அவர் சிறைக்கு சென்றதையடுத்து, டி.டி.வி. தினகரன் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பெயர்தான் துணை என்றாலும், அதிமுகவின் அதிராக மையமாகவே அவரே செயல்பட்டு வருகிறார். அவரிடம் ஆலோசித்தே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பணிகளில் செயல்படுவதாக தெரிகிறது. இதனால், தமிழகத்தில் சசிகலாவின் பினாமி ஆட்சி செயல்படுவதாக திமுக போன்ற எதிர்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.
 
இந்நிலையில்,  அதிமுக சார்பில் நடைபெறும் கூட்டம் மற்றும் விழாக்களில் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படங்கள் எதுவும் இடம் பெறுவதில்லை என்பது தெரியவந்துள்ளது. அனைத்து போஸ்டர்களிலும் ஜெயலலிதா, சசிகலா மற்றும் தினகரனின் புகைப்படங்கள் மட்டுமே இடம் பெறுகிறது.
 
சமீபத்தில், அதிமுக சார்பில் திருநின்றவூரில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை திறக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஒட்டப்பட்டிருந்த எந்த போஸ்டர்களிலும் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் இடம் பெறவில்லை. எனவே, தினகரன் தரப்பு, அவரை ஓரங்கட்டி வருவதாக எடப்பாடி ஆதரவாளர்கள் கூறிவருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
ஏற்கனவே அதிகாரிகள் மத்தியில் முதல்வருக்கு சரியான மதிப்பு கொடுக்கப்படுவதில்லை என செய்திகள் வெளியான நிலையில், போஸ்டர் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments