ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு..!

Siva
ஞாயிறு, 11 மே 2025 (09:52 IST)
ராணுவ வீரர்கள் எல்லையில் போய் சண்டை போட்டார்களா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, ‘பிரதமர் மோடிக்கு தான் திமுகவினர் நன்றி செலுத்த வேண்டும் என்றும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்றும் பேசிய அவர், ராணுவ வீரர்கள் என்ன எல்லையில் போய் சண்டையா போட்டார்கள்? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும் கருவிகளையும் மத்திய அரசுதான் வாங்கி கொடுத்தது, அதாவது மோடி தான் வாங்கி கொடுத்தார், எனவே திமுகவினர் பிரதமர் மோடியை தான் பாராட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
 
அவரது பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் இது குறித்து தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
இன்று நடந்த  செய்தியாளர்கள் சந்திப்பில்  இரவு பகல் பார்க்காமல்  நாட்டுக்காக பாடுபடும்  நம்ம இராணுவ வீரர்களை மதிக்காமல் பேசிய  தாக வந்துள்ள செய்திகள் தவறு , எங்க   பொதுச் செயலாளர்  அண்ணன் EPS  பாராட்டியுள்ளார் ,எங்க குடும்பமே முன்னால் இராணுவ வீரர்களை கொண்டது  இன்று நேற்று நாளை எப்பொழுதும் நான் ராணுவத்தை மதிக்கிறேன் !!! என செல்லூர் ராஜூ எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments