Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கு தினகரன் வாழ்த்து

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (13:32 IST)
இந்தியாவில் 84 வது கிராண்ட் மாஸ்டர்  பட்டத்தை பிரக் ஞானந்தாவின் சகோதரி வைஷாலி வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

தமிழக செஸ் வீரரும் கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞ்சானந்தாவின் சகோதரி வைஷாலி. இவர், ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகள் பெற்றதன் மூலம்  2500 புள்ளிகளை வைஷாலி கடந்தார்.

இதன் மூலம் இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெரும் 3 வது பெண் என்ற சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளதாவது:

''செஸ் போட்டியின் உயரிய பட்டமான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற தமிழ்நாட்டின் முதல் செஸ் வீராங்கனை என்ற சாதனையை படைத்திருக்கும் வைஷாலி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
கடுமையான உழைப்பு மற்றும் விடா முயற்சியின் மூலம் இந்தியாவின் 84 வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றிருக்கும் வைஷாலி அவர்கள், அடுத்தடுத்து நடைபெறும் உலகளவிலான போட்டிகளில் பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments