Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்பு மனு தாக்கலை தள்ளி வைத்த தீபா - பின்னணி என்ன?

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (13:51 IST)
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவிருந்த தீபா அதை நாளைக்கு தள்ளி வைத்துள்ளார்.


 

 
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், அங்கு நான் கண்டிப்பாக போட்டியிடுவேன் என தீபா கூறியிருந்தார். எனவே, மார்ச் 22ம் தேதி, அதாவது இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்வார் எனக் கூறப்படது. 
 
இந்நிலையில், திடீரென நாளைக்கு (மார்ச்  23ம் தேதி) வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை ஜெ.வின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். 
 
இன்றைக்கு நாள் சரியில்லை, அதனால்தான் தீபா இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை என சிலரும், இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படவுள்ளது என்பது பற்றி இன்று மாலைக்குள் தெரிந்து விடும் என்பதால், தீபா தனது திட்டத்தை நாளைக்கு தள்ளி வைத்துள்ளார் எனவும் அவரின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
ஒருவேளை இரட்டை இலை சின்னம், ஓ.பி.எஸ் அணிக்கு கிடைத்து விட்டால், அவருடன் இணைந்து செயல்பட தீபா முடிவெடுத்துள்ளதாகவும் சில செய்திகள் வெளிவந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments