Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து மரணம் : பீதியில் சசிகலா குடும்பத்தினர்

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (10:51 IST)
சசிகலா குடும்பத்தில் தொடர்ந்து பலர் மரணடைந்து வருவது அவரின் குடும்பத்தினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


சசிகலாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிச. 5ம் தேதி உடல் நலக்குறைப்பாட்டின் காரணமாக மரணமடைந்தார்.  அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததால், அது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 
 
அதன் பின் முதல்வராக சசிகலா முயன்றார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் என மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 
 
சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் கடந்த 2017 ஏப்ரல் 15ம் தேதி மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அதேபோல், சசிகலாவின் மற்றொரு அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி சந்தான லட்சுமி, அதே ஆண்டு ஜூலை 27ம் தேதி மரணமடைந்தார். 
 
அதன்பின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில்தான், அவர் சமீபத்தில் மரணமடைந்தார்.
 
ஜெயலலிதா மரணமடைந்த 15 மாதங்களுக்குள் சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் 3 பேர் அடுத்தடுத்து மரணடைந்த விவகாரம் அவரின் குடும்பத்தினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments