Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்படி பேச வெட்கமா இல்லையா ராதாராஜன்? வயசுக்கு தகுந்த மாதிரி பேசுங்க: விளாசிய டிடி

இப்படி பேச வெட்கமா இல்லையா ராதாராஜன்? வயசுக்கு தகுந்த மாதிரி பேசுங்க: விளாசிய டிடி

Advertiesment
இப்படி பேச வெட்கமா இல்லையா ராதாராஜன்? வயசுக்கு தகுந்த மாதிரி பேசுங்க: விளாசிய டிடி
, செவ்வாய், 24 ஜனவரி 2017 (12:05 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போரட்டம் உலக அளவில் புகழ் பெற்றது. இந்த போராட்ட கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்நிலையில் இதுகுறித்து பீட்டா ஆர்வலர் ராதாராஜன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.


 
 
பிபிசி தமிழ் வானொலிக்கு பேட்டியளித்த ராதாராஜன் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு கூட்டம் வருவதெல்லாம் பெரிய விஷயமல்ல, இலவச உடலுறவு என்று சொன்னால் கூட கூட்டம் வரும் என மாணவர்கள் போராட்டத்தை கொச்சையாக ஒப்பிட்டு பேசினார்.
 
இவரது இந்த கருத்துக்கு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். பல்வேறு பிரபலங்களும் அவரது கருத்துக்கு கண்டனங்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தன் பங்குக்கு தொலைக்காட்சி நடிகை டிடி என்கிற திவ்யதர்ஷினியும் ராதாராஜனை தனது டுவிட்டர் பக்கத்தில் விளாசியுள்ளார்.

 
டிடி தனது டுவிட்டர் பக்கத்தில், மாணவர்களின் போராட்டத்தை ஒப்பிட்டு பேசுவதற்கு நீங்கள் உபயோகித்த வார்த்தையை நினைத்து உங்க வயசுக்கு நீங்க வெட்கப்படனும். பசங்களும், பெண்களும் மெரினாவில் பெரும் மரியாதையை சம்பாதித்துவிட்டீர்கள் என கூறியுள்ளார். டிடி ஆரம்பம் முதலே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதை செய்தால் உடனே வெளியேறுகிறோம் - மெரினாவில் போராட்டக்காரர்கள் பேட்டி