Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை - பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (16:27 IST)
மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் நாளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது  என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

எனவே மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5ஆம் தேதி ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி, டிசம்பர் 4,5ஆம் தேதிகளில் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்  என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

இதையடுத்து,  சென்னையில் அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்கும்படி  மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் எச்சரிக்கை விடுத்து பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதாவது:

‘’தேவையான பணியாளர்கள்,24 மணி  நேரமும் இருக்க வேண்டும். அரசரகால மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில்  இருக்க வேண்டும்.  நிவாரண மையங்களில் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேவையான அளவு கிருமி நாசினி மருந்துகள் தயார் நிலையில், இருக்க வேண்டும். நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான நீர், உணவு வழங்க வேண்டும். ஆரம்பகால சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகள் இருப்பு வைத்திருக்க வேண்டும், சுகாதார மையங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போதிய எரிபொருள், ஜெனரேட்டர்கள் தயார்  நிலையில் வைத்திருக்க வேண்டும்’’ என கூறியுள்ளது.

 மிக்ஜாம் புயல் டிசம்பர் 4 ஆம் தேதி கரையை நெருங்கி வரும் என்றும் டிசம்பர் 5ஆம் தேதி  ஆந்திர கடற்கரையோரம் கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க மெடிக்கல் லீவ் எடுப்பீங்களா?.. பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட குவைத் தொழிலாளி..!

'அம்மா, நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்' - யுக்ரேனிய போர்க் கைதிகளை தொடர்ந்து கொல்லும் ரஷ்யா

பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்கு திருமணம்.. தொழிலதிபரை மணந்தார்..!

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்.. காரணம் என்ன?

வங்கக்கடலில் புயல் சின்னம்.. 3ஆம் எண் கூண்டை ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments