Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கில் விற்கப்படும் மது வகைகள் எல்லாம் கள்ளச் சாராயம்தான்: சி.வி.சண்முகம் எம்.பி

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (10:15 IST)
டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் எல்லாம் கிட்டத்தட்ட கள்ளச்சாராயம் தான் என சிவி சண்முகம் எம்பி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிவி சண்முகம் கலந்து கொண்டார். 
 
அப்போது அனுமதி பெறாத டாஸ்மாக் பார்கள் மூலம் 20,000 கோடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும் இது பற்றி அமலாக்கத்துறையில்  செந்தில் பாலாஜியிடம் விசாரித்தால் நாம் சிக்கி விடுவோம் என்று கருதி தான் முதல்வர் அவரை காப்பாற்ற முயற்சி செய்வதாகவும் கூறினார். 
 
மேலும் டாஸ்மாக் மதுவை குடித்து உயிரிழப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது என்றும் தஞ்சை மதுரை மயிலாடுதுறை லால்குடி மற்றும் சேலத்தில் மது குடித்தவர்கள் இறந்தவர்கள் எண்ணிக்கை தொடருவதை பார்க்கும் போது டாஸ்மாக்கில் விற்கப்படும் மது வகைகளும் பெரும்பாலும் கள்ளச்சாராயம் தான் என தெரிய வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments