டாஸ்மாக் மது கடைகளை மூடினால் ஒரு லட்சம் கோடி வருமானத்திற்கு நான் வழி சொல்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்க கூட்டத்தில் பேசிய அண்ணாமலை டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு மீண்டும் தென்னை மரம் பனைமரம் கள்ளு ஆகியவற்றை கொண்டு வாருங்கள். ஜூன் 14ஆம் தேதி மாநில அரசுக்கு நாங்கள் தயாரித்து உள்ள வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம் என்றும் கூறினார்.
அந்த வெள்ளை அறிக்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பனைமரம் தென்னை மரத்தின் வாயிலாக அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவது எப்படி என்பதை சுட்டிக்காட்டி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மூலம் கிடைக்கும் 44 ஆயிரம் கோடி வருமானம் இதற்கு முன் ஒன்றுமே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எந்த காலத்திலும் திமுக டாஸ்மாக் கடைகளை மூடாது என்றும் பெயரளவில் 100 கடைகளை மூடி விடுவதால் எந்த விதமான பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.