Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று முதல் ஊரடங்கு அமல்…வெறிச்சோடிய சென்னை !

இன்று முதல் ஊரடங்கு அமல்…வெறிச்சோடிய சென்னை !
, செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (22:29 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

குறிப்பாக மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட மாநிலத்தில் இந்த் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க மத்திய அரசுமாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல் சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் மக்களின் எண்ணிக்கை வெகுவாய்க் குறைந்தது.

அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் முன்கூட்டியே இந்த ஊரடங் அறிவிக்கப்பட்டதால் மக்களின் எண்ணிக்கை வெகுவாய்க் குறைந்தது.

சென்னை தவிர்த்து., இதர மாவட்டங்களான செங்கல்பட்டு, திருச்சி,சேலம், கோவை, திருப்பூர், காஞ்சிபுரம்,  தென்காசி, திண்டுக்கல்,திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும்  அங்குள்ள பேருந்து நிலையங்கள், முக்கிய இடங்கள் , சந்தைகள், கடைகள் போன்ற இடங்களில் மக்களின் நடமாட்டம் அரசு திட்டமிட்டபடி குறைந்ததுள்ளது.

ஊரடங்கு தான் கொரோனாவுக்கு எதிரான ஆயுதம் என பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றியது போல், மக்களும் மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றிலிருந்து நம்மையும் தனது சமுதாயத்தையும் நாட்டையும் காக்க நம் ஒவ்வொருவரும் கையிலெடுக்க வேண்டிய ஒரு ஆயுதமாக இந்த ஊரடங்கு உடன், சமூக விலகமும், முகக்கசம் மற்றும் பொதுவெளியில் தேவையின்றி நடமாடாமல் இருந்தாலே குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்குச் சவால் விடும் கொரோனா தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொண்டு, இஸ்ரேல் நாட்டைப் போல் விரைவிலேயே இதிலிருந்து மீள முடியும் என நம்புவோம்.
 
 சினோஜ்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கின்போது வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: காவல்துறை ஆணையர் அறிவிப்பு