விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும். வேலையின்மையை கைவிட்டு புதிய வேலைவாய்ப்பகளை உருவாக்கிட வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்திடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களை நேரிடையாக சந்தித்து துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் நகரக்கழு சார்பில் நகர செயலாளர் எம்.ஜோதிபாசு தலைமையில் தாந்தோணிமலை, ராயனூர், புலியூர், வெள்ளியணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு கோரிக்கைகள் விளக்கி பேசினார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.வேலுசாமி, நகரக்குழு உறுப்பினர்கள் ஜோச்சுமின், தண்டபாணி, ராமகிருஷ்ணன், கிளை நிர்வாகிகள் சக்திவேல், வாலிபர் சங்க நகர செயலாளர் ரகு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
க.பரமத்தி ஒன்றியம்
கட்சியின் க.பரமத்தி ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு கட்சியின் க.பரமத்தி ஒன்றிய செயலாளர் கே.வி.பழனிசாமி தலைமை வகித்தார். க.பரமத்தி, கடைவீதி, தென்னிலை, சின்னதாராபுரம், ஒத்தமாந்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி கோரிக்கைகள் விளக்கி பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் சி.முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமசாமி, கிளை செயலாளர்கள் சுந்தரம், ஆறுமுகம், சேமன், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சி.ஆனந்தகுமார் - கரூர் மாவட்டம்