Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரையல் பார்க்கலாமா? புல்லட்டோடு எஸ் ஆன காதல் ஜோடி!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (09:42 IST)
சேலத்தில் செகண்ட் ஹேண்ட் வாகனங்கள் வாங்கி விற்கும் நிறுவனத்தில் பைக் வாங்க வந்த ஜோடி பைக்கோடு தப்பி ஓடியுள்ளனர்.

சேலத்தில் உள்ள அந்த இரு சக்கர வாகன செகண்ட் ஹேண்ட் கடையில் பைக் வந்துள்ளது இரண்டு ஜோடிகள். அதில் ஜோடி விலை மதிப்புமிக்க 1.75 லட்சம் மதிப்புள்ள புல்லட்டை தேர்வு செய்துள்ளனர். ஆனால் புல்லட்டை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். கூடவந்த மற்றொரு ஜோடி கடையில் இருந்ததால் கடைக்காரர் அனுமதித்துள்ளார்.

ஆனால் புல்லட்டை எடுத்துச் சென்ற அவர்கள் திரும்பி வரவே இல்லை. இதனால் கடையில் இருந்த மற்றொரு ஜோடியிடம் அவர்களுக்கு செல்போனில் அழைக்க சொல்லியுள்ளார். ஆனால் அந்த ஜோடி தங்களுக்கு புல்லட்டில் சென்ற ஜோடிகளை தெரியாது என்றும், தாங்கள் தனியாக வந்ததாகவும் சொல்லியுள்ளனர்.

ஆனால் சந்தேகப்பட்ட கடைக்காரர் போலிஸாருக்கு தகவல் சொல்ல விசாரணையில் தப்பித்து சென்ற ஜோடியில் அந்த பெண்ணை மட்டும் தெரியும் எனக் கூறியுள்ளனர். இப்போது தப்பித்துச் சென்ற ஜோடிகளை தேடும் பணியில் போலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த நபர்? யார் அந்த சார்? மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்! - எடப்பாடி பழனிசாமி!

இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

விமான விபத்தில் இருந்து தப்பித்த 2 பணிப்பெண்கள்.. மயக்கத்தில் இருந்து எழுந்ததும் கேட்ட கேள்வி..

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்..!

விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாதான்! - அஜர்பைஜான் அதிபர் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments