Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனமழை எச்சரிக்கை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி கலந்தாய்வு தேதி ஒத்திவைப்பு..!

கனமழை எச்சரிக்கை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி கலந்தாய்வு தேதி ஒத்திவைப்பு..!

Mahendran

, திங்கள், 14 அக்டோபர் 2024 (16:34 IST)
சென்னையில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவக் கோர்சுகளுக்கான கலந்தாய்வு, 17-ம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மழை எச்சரிக்கையினால், கலந்தாய்வு தற்போது 21-ம் தேதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
 
2024-2025 ஆண்டுக்கான சித்தா (BSMS), ஆயுர்வேதா (BAMS), யுனானி (BUMS), ஓமியோபதி (BHMS) போன்ற பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை NEET தேர்வில் தகுதி பெற்றவர்களுக்காக நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு தற்போது 21-ம் தேதி தொடங்கி, 29-ம் தேதி வரை நடைபெறும்.
 
முதல்நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் 7.5% உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 22-ம் தேதி தொடங்கி, 29-ம் தேதி வரை நடைபெறும். 
 
கூடுதல் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
 
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாராஷ்டிரா பல்கலைக்கழகத்துக்கு ரத்தன் டாடா பெயர்: மாநில அரசு அறிவிப்பு