Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகக்கவசங்களில் 7 நாட்கள் வரை கொரோனா - அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (10:19 IST)
முகக்கவசங்களில் 7 நாட்கள் வரை கொரோனா இருக்கும் என ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளும், பலியும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,789 ஆக இருந்த நிலையில் தற்போது 5,194 ஆக உயர்ந்துள்ளது. 124 ஆக இருந்த பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக குணமானவர்கள் எண்ணிக்கை 353 லிருந்து 402 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,018 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலம் ஏப்ரல் 14ல் முடிவதாக உள்ள நிலையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
 
இந்நிலையில் கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள முகக்கவசங்களை பயன்படுத்தும் படியும், கைகளை அல்கஹால் சானிடைசர் கொண்டும் கழுவும் படியும் அறிவுறுத்தி வருகின்றனர், ஆனால், இதில் அதிர்ச்சிகரமாக முகக்கவசங்களில் 7 நாட்கள் வரை கொரோனா இருக்கும் என ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
எனவே, முகக்கவசங்களை திரும்ப திரும்ப பயன்படுத்தாமல் ஒருவர் பயன்படுத்தியதை மற்றொருவர் பயப்படுத்தாமல் இருப்பதும் நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் தினத்தில் சென்னை கிண்டியில் குதிரைப் பந்தயம்.. லட்சக்கணக்கில் பரிசுகள்..!

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்..!

80 மாணவிகளின் சட்டையை அவிழ்த்த தலைமை ஆசிரியர்.. ஆத்திரத்தில் பொங்கிய பெற்றோர்..!

சென்னை புத்தகக் காட்சி இன்று கடைசி.. மக்கள் குவிவார்கள் என எதிர்பார்ப்பு..!

என் மனைவியை பார்த்து கொண்டே இருப்பது பிடிக்கும்.. 90 மணி நேரம் வேலை குறித்து ஆனந்த் மகேந்திரா..

அடுத்த கட்டுரையில்
Show comments