Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாக்சின் மருந்து பரிசோதனை: சென்னையில் துவங்கியது!!

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (15:43 IST)
கோவாக்சின் மருந்து பரிசோதனை சென்னையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.
 
கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின் மருந்தை, மனிதர்கள் மீது செலுத்தும் சோதனை, இன்று சென்னையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.
 
இந்திய அளவில் நான்கு இடங்களில் மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடைபெறும் இடங்களில், தமிழகமும் இடம் பெற்றுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்து சோதனை , ஏற்கனவே மற்ற மூன்று இடங்களில் தொடங்கிவிட்டது. 
 
தற்போது தமிழகத்தில் தொடங்கியுள்ள சோதனையின் முதல்கட்டமாக, சோதனைக்கு தயாராக உள்ளவர்களின் உடல்நிலை ஆராயப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, மருந்தை செலுத்தவுள்ளதாக எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
முதல் பரிசோதனை முடிவடைய 14 நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியின் முதல் கட்ட சோதனையில், அந்த மருந்து மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகிறது என்பது உறுதியாகியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments