Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கங்களுக்கு கொரோனா எதிரொலி: யானைகளுக்கும் பரிசோதனை செய்ய முடிவு!

Webdunia
ஞாயிறு, 6 ஜூன் 2021 (18:45 IST)
சமீபத்தில் வண்டலூர் பூங்காவில் இருக்கும் ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதில் ஒரு சிங்கம் கொரோனாவால் உயிரிழந்தது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வண்டலூர் பூங்காவுக்கு நேரில் ஆய்வு செய்தார் என்பதும் சிங்கங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வண்டலூர் பூங்காவில் ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதுமலை டாப்சிலிப் முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவ குழு ஒன்று நாளை உதகை செல்ல இருப்பதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார் 
 
அங்கு உள்ள யானைகளுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மனிதர்களை அடுத்து விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments