Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சாவூரில் கொரோனா பாதிப்பு குறையும்… ஆனால் இந்த பகுதிகளில் அதிகமாகும் – ராதாகிருஷ்ணன் பதில்!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (12:18 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 14க்கும் அதிகமான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் தனியார் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 180 பள்ளி மாணவர்கள் மற்றும் 13 கல்லூரி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  முன்னதாக, தஞ்சாவூரில் பள்ளி மாணவர்கள் 180 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இதுபற்றி பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ‘தஞ்சாவூரில் படிப்படியாக கொரோனா தொற்று குறையும். ஆனால் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அங்கு அதிக கவனம் செலுத்தப்படும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எந்த தொகுதியில் ராஜினாமா..! ராகுல் காந்தி இன்று அறிவிப்பு.?

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

எச்சரிக்கைக்கு எந்த பயனும் இல்லை.. திருவொற்றியூரில் மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம்..!

சவுதி அரேபியால் வெப்ப அலை.. ஹஜ் பயணம் செய்த 19 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments