Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோயாளிகள் ஆர்டர் செய்த தந்தூரி சிக்கன்: அதிர்ச்சியில் மருத்துவர்கள்

Webdunia
வியாழன், 21 மே 2020 (11:22 IST)
கொரோனா நோயாளிகள் ஆர்டர் செய்த தந்தூரி சிக்கன்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என ஏற்கனவே மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் குற்றம்சாட்டி வருகின்றனர். சிலர் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் நோயாளி போல் இல்லாமல் விருந்தாளி போல் நடந்து கொள்வதாகவும் மருத்துவமனைகளில் இருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் சேலம் மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான்கு நோயாளிகள் ஒன்று சேர்ந்து ஆன்லைனில் தந்தூரி சிக்கன் செய்து சாப்பிட்டு உள்ளனர். இதனை தற்செயலாகப் பார்த்த மருத்துவர்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கும் நிலையில் மருத்துவர்களின் பரிந்துரை செய்யும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறி இருக்கின்றனர். ஆனால் மருத்துவர்களின் அறிவுரையை அவர்கள் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை
 
கொரோனா நோயாளிகள் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் நோயாளிகளை போலவே அவருடைய உறவினர்களும் இருப்பதாக மருத்துவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன. கொரோனா நோயாளிகள் ஆன்லைனில் தந்தூரி சிக்கனை ஆர்டர் செய்து வரவழைத்து தனியாக சாப்பிட்டுக்கொண்டிருந்த சம்பவம் சேலம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

6 மணி நேரத்தில் உருவாகும் ஃபெங்கல் புயல்.. மணிக்கு 13 கிமீ வேகம்! இன்றும் ரெட் அலெர்ட்!

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments