#விஜயகாந்தை தொடர்ந்து மனைவி #பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று உறுதி ! தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (15:22 IST)
தேமுதிக தலைவர் #விஜயகாந்தை தொடர்ந்து மனைவி #பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரனோ தோற்று பரவி இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் தேமுதிக தலைமைக் கழகம் விஜயகாந்துக்கு கொரோனா இல்லை என்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது

ஆனால் அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்துக்கு இலேசான கொரனோ தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து விஜயகாந்துக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்

இந்த நிலையில் தற்போது விஜயகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்பது குறித்த தகவலை அவரது மைத்துனர் எல்.கே.சுதீஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் நாளை சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என சுதீஷ் தகவல் தெரிவித்து உள்ளதால் தேமுதிக தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்
விஜயகாந்த் டிஸ்சார்ஜ் ஆகி, வீடு திரும்ப உள்ளதால் அவர் கொரனோவில் இருந்து குணமாகி விட்டதாகவே கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிமுக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் கொரொனாதொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேமலதா விஜயகாந்த் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அக்கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments