Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு கொரோனா !

Advertiesment
10 வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு கொரோனா !
, வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (20:51 IST)
கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா கால ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 9 ,10, 11, மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு  ஆன்லைன் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுத்து வந்தனர்.

இந்நிலையில்,  திண்டுக்கலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 3 மாணவிகளும் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 6 முதல் 8 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு  இன்னும் வகுப்புகள் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் தடை நீட்டிப்பு