Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்பிவேக்ஸ் பூஸ்டர் போடும் பணி துவக்கம்!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (10:22 IST)
தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கார்பிவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடக்கம்.


நாட்டில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல அதிகரித்துள்ள நிலையில் கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது. முதல் இரண்டு டோஸ் போட்டு முடித்ததும் அடுத்து பூஸ்டர் டோஸ் போட வேண்டும்.

கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள், எந்த தடுப்பூசியை முதல் 2 டோஸ்களாக செலுத்தி கொண்டார்களோ, அதனையே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகவும் செலுத்தி கொள்கின்றனர். ஆனால், தற்போது கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்கள் கார்பிவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதலும் அளித்துள்ளது.

இதன்படி, 18 வயது பூர்த்தியடைந்த நபர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான பரிந்துரையில் இருந்த தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கோவிட் நோய்க்கு எதிரான முதன்மை தடுப்பூசிக்கு பயன்படுத்தப்படும் மருந்திலிருந்து வேறுபட்ட பூஸ்டர் டோஸ் நாட்டில் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கார்பிவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. கோவிஷுல்டு அல்லது கோவேக்சின் தடுப்பூசிகளை செலுத்தி 6 மாதம் ஆனவர்கள் கார்பிவேக்ஸ் செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments