தமிழ்நாட்டில் உள்ள தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட் விலையை உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மற்றும் பல தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் தினசரி பால் பயன்பாட்டில் 16 சதவீதத்தை ஆவின் பூர்த்தி செய்கிறது. மீத 84 சதவீத பால் தேவையை தனியார் பால் நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன.
இந்நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட் விலையை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக உயர்த்த உள்ளன. முன்னதாக ஜனவரி மாதத்தில் ஒரு முறையும், மார்ச் மாதத்தில் ஒருமுறையில் விலை உயர்ந்தது. தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக விலை உயர்த்தப்பட உள்ளது.
சீனிவாசா பால் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2 விலை உயர்த்தியுள்ள நிலையில், ஹட்சன் நிறுவனம் நாளை முதல் லிட்டருக்கு ரூ.4 உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து மற்ற பால் நிறுவனங்களும் விலை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் தனியார் பால் நிறுவன பாக்கெட்டுகளை வாங்கும் மக்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.