Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நெஞ்சில் பால் வார்த்த அமைச்சரின் ஆறுதல் பேச்சு!

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (17:47 IST)
தற்போது பெட்ரோல் டீசல் விலை  விண்ணை முட்டும் அளவு உயர்ந்து வந்தாலும் தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
கடந்த மாதத்திலிருந்து பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தவண்ணமாகவே இருந்ததால் மக்கள் கடும் அவதிகு ஆளாகினர்.இதனையடுத்து தமிழகத்தில் பேருந்து கட்டணமும் உயர்த்த போவதாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில் மாதத்திர பேருந்து பாஸ் அட்டை கட்டணத்தை 1000  ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக அயர்த்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இதற்கு எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் கே,கே.நகரில் இன்று பகலில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் கூறியதவது:
 
’பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலையில் சுமையை ஏற்ற அரசு தயாராக இல்லை.தற்போது நிலவும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு அரசுக்கு கடும் சவாலாகவே உள்ளது.
 
பெட்ரோல் டீசல் மானியத்தை உயர்த்த வேண்டி துணைமுதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments