Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப்பேரவையில் நீட் பிரச்சினையால் சர்ச்சை! – காங்கிரஸ் வெளியேற்றம்!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (12:20 IST)
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்த விவாதத்தில் வாக்குவாதம் எழுந்ததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசின் நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து நடந்த விவாதத்தில் நீட் தேர்வு குறித்து அதிமுக மேல் பழிபோடுவதாக பேசப்பட்ட நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் நீட் கொண்டுவரப்பட்டது என முதல்வர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் நீட்டுக்கு ஆதரவாக ப.சிதம்பரத்தின் மனைவி நீதிமன்றத்தில் வாதாடியதாக அதிமுக குற்றம் சாட்டியது.

அதிமுக உறுப்பினர் தனது பேச்சை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பங்களை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து மேலும் சூடான விவாதங்கள் பேரவையில் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரே படுதோல்வி.. எடுபடாத ராகுல் பிரச்சாரம்..!

ஒரே வாரத்தில் 3000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

மெஜாரிட்டியை தாண்டி பாஜக அபார வெற்றி.. இந்தியா கூட்டணி படுதோல்வி..!

இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா, ஜார்கண்ட்.. இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை.. வயநாடு நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments