Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸாருடன் வாக்குவாதம் ... மயக்கம் அடைந்த கண்டக்டர் உயிரிழப்பு ...

Webdunia
திங்கள், 2 செப்டம்பர் 2019 (18:25 IST)
கடலூர் மாவட்டம் அருகே அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்காத போலீஸ்காரருடம் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் கண்டக்டர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திட்டக்குடி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் பழனிவேல். இவர் சீருடை அணியமால் திருச்சியிலிருந்து கடலூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார்.
 
அப்போது,  நடத்துனர் கோபிநாத், அவரிடம் பயணச்சீட்டு வாங்குமாறு கூறியுள்ளார். அதற்கு தான் போலீஸ் என அவர்  கூறியதாகத்தெரிகிறது. அதற்கான அடையாள அட்டையை காட்டும்படி கோபிநாத் கூறியுள்ளார். ஆனால் பழனிவேல் அதைக் காட்டவில்லை எனதெரிகிறது.
 
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் எழுந்தது. சென்று கொண்டிருக்கும் பேருந்தில் மக்கள் அனைவரும் போலீஸுக்கு எதிராக குரல் கொடுத்த நிலையில்,  கோபிநாத பேருண்டில் மயங்கிவிழுந்தார். பின்னர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 
 
இதுகுறித்து காவலர் பழனிவேலிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments