Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலியோடு தனிமை… வீட்டை வெளியில் பூட்டிய மக்கள் – அவமானத்தால் இளைஞர் செய்த விபரீதம்!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (10:30 IST)
கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலியுடன் தனிமையில் இருக்கும்போது மக்கள் கண்டுபிடித்துவிட்டதால் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார் இளைஞர் ஒருவர்.

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ளது கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து நடத்துனர் கிருஷ்ணகுமார் (23). இவருக்கு தனது பஸ்ஸில் அடிக்கடி வந்து சென்ற ஒரு 45 வயது பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவர்கள் தங்கள் பழக்கத்தை தொடர்ந்துள்ளனர்.

இவர்கள் மீது அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அந்த பெண்ணின் வீட்டுக்கு கிருஷ்ணகுமார் சென்றிருந்த போது, வீட்டின் வெளியே தாழ்ப்பாலைப் போட்டு ஊரைக் கூட்டியுள்ளார் ஒருவர். வீட்டின் முன்பு பொதுமக்கள் கூடிவிட்டதால் கள்ளக்காதலி ஷாலினி வீட்டின் பின்புறம் வழியாக தப்பி ஓடிவிட்டார். ஆனால் இந்த அவமானம் தாங்காத கிருஷ்ணகுமாரோ அந்த வீட்டிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வீட்டை உடைத்துச் சென்று உள்ளே பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அடுத்தவர்களின் படுக்கையறையை எட்டிப்பார்க்கும் மக்களின் மோசமான பொதுப்புத்தியால் ஒரு உயிர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments