Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிகள் திறப்பது எப்போது? மத்திய அரசின் அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (13:00 IST)
முன்பெல்லாம் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என்றால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் தற்போது கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாததால் எப்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் உள்ளனர் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் கடந்த இரண்டு மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பரில் பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஏற்கனவே ஏழு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற மாநிலங்களிலும் பள்ளிகளும் கல்லூரிகளும் எப்போது திறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின் படி நவம்பர் 1 முதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கல்லூரிகள் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் முதல் கட்டமாக முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments