Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரோட்டாவில் கை வைத்த இளைஞர்! கொலையில் முடிந்த சண்டை! – கோவையில் பரபரப்பு!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (12:07 IST)
கோவையில் பரோட்டாவை எடுத்து சாப்பிட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிபவர் 52 வயதான வெள்ளையங்கிரி. அதே சூளையில் ஜெயக்குமார் என்ற இளைஞரும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய ஜெயக்குமார் செங்கல்சூளைக்கு வந்துள்ளார். அங்கே வெள்ளையங்கிரி பரோட்டா வாங்கி வந்து சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார்.

அவரிடம் சென்ற ஜெயக்குமார் அவரது அனுமதி பெறாமலே அவரது பரோட்டாவை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. ஆத்திரத்தில் அருகில் இருந்த ஒரு கட்டையால் ஜெயக்குமாரை தலையில் தாக்கியுள்ளார் வெள்ளையங்கிரி. இதனால் அடிபட்ட ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் வெள்ளையங்கிரியை கைது செய்துள்ளனர், பரோட்டாவால் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.. உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!

பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும்..! தமிழக அரசுக்கு நீதிபதி சந்துரு பரிந்துரை.!!

சென்னை பெசன்ட் நகர் கார் விபத்து: ஆந்திர எம்.பி., மகள் கைது

பெண்ணின் உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்.! 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்..!!

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள்..! பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments