Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க எந்த மாவட்டம்னே தெரியல..! – ஓட்டு போட மறுக்கும் 12 கிராமங்கள்!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (11:56 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓட்டு போட போவதில்லை என கோவில்பட்டி அருகே உள்ள 12 கிராமங்கள் முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுக்கா அருகே அய்யனேரி, அப்பனேரி, பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட 12 கிராமங்கள் உள்ளன. 1986ல் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி தனி மாவட்டமாக உருவானபோது தங்களை கோவில்பட்டி தாலுகாவில் இணைக்க வலியுறுத்தினர். மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு தூத்துக்குடி மாவட்டமே அவர்களுக்கு பிரதானமாய் உள்ள நிலையில் வருவாய்த்துறை, காவல்துறை, நீதித்துறை, போக்குவரத்து உள்ளிட்டவை தூத்துக்குடியிலும், உள்ளாட்சி, மின்சார வாரியம் உள்ளிட்டவை திருநெல்வேலியிலேயே உள்ளன.

இந்நிலையில் தற்போது பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்துடன் இந்த கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று மாவட்டத்திற்கும் இல்லாமல் பல துறைகளும் பிரிந்து இருப்பதால் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் இன்ன பிற வசதிகள் சரியாக கிடைக்கவில்லை என்று இந்த தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என கிராமத்தினர் முடிவெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments