Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக லஞ்ச லாவண்யம் சந்தி சிரிக்கிறது: ஸ்டாலின் காட்டம்!

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (10:50 IST)
சிடிஎஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அதிமுகவிற்கு லஞ்சம் வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
சென்னையில் உள்ள காக்னிசன்ட் (சிடிஎஸ்) தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கே.ஐ.டி.எஸ் கேம்பஸ் கட்டிடம் கட்டுவதற்கும், சிறுசேரியில் கட்டிட அனுமதி, மின்சார இணைப்பு, சுற்றுச்சூழல் அனுமதி பெற தமிழக அரசு அதிகாரிகளுக்கு ரூ.26 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், தற்போது சிடிஎஸ் லஞ்சம் வழங்கியதை நீதிமன்ரத்தில் ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தியுள்ளதாம். இந்நிலையில் திமுக தலிஅவர் முக ஸ்டாலின் இதை குறிப்பிட்டு அதிமுக அரசை காட்டமாக விமர்சித்துள்ளார். ஸ்டாலின் இது குறித்து குறிப்பிட்டுள்ளதாவது, 
சிடிஎஸ், சென்னையில் புதிய கட்டிடம் கட்ட அனுமதிக்காக, அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு லஞ்சம் தந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தி இருக்கிறது. தமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்திருக்கிறது. 
 
லஞ்சம் தந்தவர்களுக்கு அமெரிக்கா தண்டனை தந்திருக்கிறது. ஆனால், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது எப்ஐஆர் கூட போடாமல் பாதுகாக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. மத்திய அரசும், சிபிஐயும் இதை கண்டும் காணாமல் இதை  ஊக்குவிக்கின்றனவா? என கேள்வியும் எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments