நடிகர் பவன் கல்யாண், அரசியலில் தேவைப்பட்டால் ரஜினி அல்லது கமலுடன் சேர்ந்து செயல்படுவேன் என கூறியுள்ளார்.
நடிகரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நேற்று சென்னை வந்தார். சென்னையில் இருக்கும் நட்சத்திர விடுதி ஒன்றில், அவருடனான செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண், தென் மாநிலங்களுக்கு தனியாக ஒரு தலைநகரம் வேண்டும். மத்தியில் ஆளும் அரசுகள் தென்னிந்திய மாநிலங்களை கடந்த 20 வருடங்களாக புறக்கணித்து வருகிறது.
கடந்தத் தேர்தலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேன். ஆனால், இப்போது அந்தக் கட்சியின் செயல்பாடுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மத்திய அரசிடம் சரியாக முறையிடுவதில்லை. அதனால் நான் மிகுந்த அதிருப்திக்குள்ளானேன்.
நடிகராக இருக்கும் ஒருவர் மக்களின் நம்பிக்கையைப் பெற நிறைய உழைக்க வேண்டும். அதற்கு சரியானவர்கள் ரஜினி , கமல் தான் , அதனால் தேவைப்பட்டால் ரஜினி அல்லது கமலுடன் இணைந்து செயல்படுவேன். ஆனால், அப்படி ஒரு நிலை ஏற்படாது.
2019 தேர்தலில் ஆந்திர முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவேன்,” என பவன் கல்யாண் தெரிவித்தார்.