Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுறவு சங்கம் : தலைவராக செயல்பட ஓபிஎஸ்., தம்பிக்கு இடைக்கால தடை

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (13:56 IST)
தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணைமுதல்வருமான ஒ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ. ராஜா செயல்பட்டு வந்த நிலையில், அவர் தலைவராக செயல்பட, இன்று, நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
எந்தவிதமான முன்னறிவிப்புகளும் இல்லாமல் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், ஓ. ராஜா மற்றும் 16 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது; இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து, அமாவாசை என்பவர்,  மதுரை, உயர் நீதிமன்றத்தின் கிளையில் வழக்கு தொடுத்தார்.
 
இதனையடுத்து, இன்று,  மதுரை உயர் நீதிமன்றகிளை நீதிபதி, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள பால் உற்பத்தி, பால்வள மேம்பாட்டுத்துறை பதிவாளர் ஓ.ராஜா உள்ளிட்ட 17 உறுப்பினர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, இவ்வழக்கை வரும்  அக்., 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
மேலும், தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க  தலைவராக ஓ.ராஜா மற்றும் இடைக்கால நிர்வாகக் குழுவும் செயல்பட தடை விதித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments