Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலைக்குள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை: முதலமைச்சர் ஸ்டாலின்..!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (12:16 IST)
தீபாவளியை முன்னிட்டு இந்த மாதம் முன்கூட்டியே மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று மாலைக்குள் மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

தமிழ்நாட்டில் ஏற்கனவே 1.06 கோடி மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் நிலையில்  மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள்  மேல்முறையீடு செய்த நிலையில் அவர்களுக்கும் இன்று முதல் வழங்கப்பட உள்ளது

இந்த நிலையில் இரண்டாம் கட்ட மகளிர் உரிமை தொகையின்  நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்  ’ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை பெறும் 1.06 கோடி மகளிர் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர் ஆகிய அனைவருக்கும் இன்று மாலைக்குள் உரிமைத்தொகை வந்தடையும் என்றும் இது உதவித்தொகையல்ல உரிமைத்தொகை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தனக்கு காய்ச்சல் என்றும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்கச் சொல்லியும்  மக்களை சந்திக்காமல் என்னால் இருக்க முடியாது என்று இந்த நிகழ்ச்சிக்கு வந்து விட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்..!

மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. ஆளுநருடன் சந்திப்பு!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments