கோவை விழா: கீழே அமர்ந்திருந்த வானதியை மேடைக்கு அழைத்த முதல்வர்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (13:56 IST)
கோவையில் நடந்த அரசு விழாவில் கீழே அமர்ந்திருந்த கோவை தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனை மேடைக்கு முதல்வர் முக ஸ்டாலின் அழைத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 
 
கோவையில் இன்று நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரசு விழாவில் கலந்து கொள்ள கோவை தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
 
இந்த நிலையில் இந்த விழாவில் மேடையின் கீழே உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்த வானதி ஸ்ரீனிவாசனை பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அவரை மேடைக்கு வருமாறு அழைப்பு விடுத்து தனது அருகிலேயே ஒரு நாற்காலி போட சொல்லி அவரை அமர வைத்தார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லாம் சின்ன பசங்க!. இது கூட தெரியல!.. தவெகவை நக்கலடித்த சீமான்...

நாயை கதற கதற பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபர்.. கொடூர சம்பவம்..!

ஒரே வாரத்தில் சுமார் ரூ.1.50 லட்சம் குறைந்த வெள்ளி விலை.. இன்னும் குறையும் என எச்சரிக்கை..!

ரூ.580 கோடிக்கு விற்கப்பட்ட .com டொமைன்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

தூக்கில் தொங்குவது போல ரீல்ஸ்!.. உயிரை இழந்த 27 வயது பெண்!...

அடுத்த கட்டுரையில்
Show comments