Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாநில தேர்தல் முடிவுகளை படிப்பினையாகவே பார்க்கிறோம்.. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (12:30 IST)
3 மாநில தேர்தல் முடிவுகளை படிப்பினையாகவே பார்க்கிறோம் என்றும், 3 மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தல் முடிவை பாதிக்காது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை ஒன்று சேர்க்கும் முயற்சியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஆளுநர் மனம் மாறி தமிழ்நாட்டின் நன்மைக்காக செயல்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு என்றும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான சில சக்திகளின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
மேலும் 2015ல் செம்பரம்பாக்கத்தில் நீர் திறந்து விடுவதில் ஏற்பட்ட குளறுபடியே பெரும் பிரச்னையை உருவாக்கியது என்றும், ‘மிக்ஜாம்’ புயலின் போது செம்பரம்பாக்கம் ஏறியிலிருந்து உரிய நேரத்தில் நீர் திறந்து விடப்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டது என்றும் முதல்வர் கூறினார். 
 
சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது என்றும், திருப்புகழ் கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்திவருகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments