Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விசாரணை கைதி விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

Advertiesment
stalin
, செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (14:15 IST)
சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணை கைதியாக இருந்த விக்னேஷ் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்
 
விக்னேஷ்  மரணம் குறித்து அதிமுகவினர் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த முதல்வர், இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும் இதுகுறித்த முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்
 
மேலும் மரணமடைந்த விக்னேஷின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்யப்படும் என்றும் அவரது மரணத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் விசாரணை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவாக்சினுக்கு அனுமதி... 6 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம்!