தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று இருந்த நிலையில் இன்று அவர் சென்னைக்கு புறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார் என்பதும் அமெரிக்காவில் அவர் தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார் என்பதையும் கடந்த சில நாட்களாக வெளியான செய்தியை பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அவர் சென்னை புறப்பட்டு விட்டதாகவும் 17 நாட்கள் அரசு முறை பயணம் நிறைவடைந்த நிலையில் அவருடைய வருகைக்கு நன்றி தெரிவித்து அமெரிக்க வாழ் தமிழர்கள் சிகாகோ விமான நிலையத்தில் அவருக்கு நன்றி தெரிவித்து பதாகைகள் ஏந்தி அனுப்பி வைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் நடந்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கு ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனத்துடன் ரூபாய் 100 கோடி முதலீடு செய்வதற்கான கையெழுத்தானது. இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நிறுவனங்களுக்கு பணியாளர், மேலாண்மை, பொறியியல், தரமான வாழ்க்கை, சுழற்சி மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவது இந்நிறுவனத்தின் கடமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது