Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியர் இளையராஜா மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (16:43 IST)
மறைந்த ஓவியர் இளையராஜாவுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தைச் சேர்ந்த ஓவியர் இளையராஜா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது ஓவியமா அல்லது நிஜமா என்று சந்தேகம் ஏற்படக் கூடிய அளவில் தத்ரூபமாக ஓவியம் வரைபவர் கும்பகோணத்தைச் சேர்ந்த இளையராஜா. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் இவர் பணியாற்றிய போது வரைந்த ஓவியங்கள் தமிழகம் முழுவதும் பரவலான கவனத்தைப் பெற்று பாராட்டுகளைக் குவித்தன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவருக்கு சமூகவலைதளங்களில் இரங்கல் அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில் ‘தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் இளையராஜாவின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments