சினிமாவும், சூதாட்டமும் ஒரே பிரிவில்.. பஸ் பிடித்து Finance Ministerஐ பார்ப்பேன்! - நடிகர் விஷால் பேட்டி!

Prasanth Karthick
வெள்ளி, 31 ஜனவரி 2025 (10:45 IST)

நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சினிமாவையும், சூதாட்டத்தையும் ஒரே பிரிவில் வைப்பதை மாற்ற வேண்டும் என நடிகர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

 

இந்தியாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி செய்து வரும் நிலையில் இந்த ஆட்சி காலத்தின் முதல் ஆண்டு பட்ஜெட் 2025-26 நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில் பலரும் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கின்றனர்.

 

இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசிய நடிகர் விஷால் “இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களில் ஒரே வரி மட்டுமே இருக்கிறது. ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் இரண்டு வரி செலுத்திக் கொண்டிருக்கிறோம். இதுகுறித்து பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலையிடமும் கோரிக்கைகள் வைத்தேன். ஒரே நாடு ஒரே வரி என்ற சொன்னபிறகு தமிழ்நாட்டில் மட்டும் எதற்காக இரண்டு வரி கட்ட வேண்டும். இதில் அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும்.

 

பட்ஜெட் அறிவிப்பில் சினிமாவையும், சூதாட்டத்தையும் ஒரே கேட்டகரியில் வைத்துள்ளார்கள். அதை மாற்ற வேண்டும். சினிமாவை தனி கேட்டகரியாக்க வேண்டும். இதை செய்தால் பஸ் பிடித்து சென்று நிதியமைச்சருக்கு நன்றி சொல்லிவிட்டு வருவேன்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments