Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியும் தமிழும்தான் எங்க உயிர்.. சாரி.. தப்பா சொல்லிட்டேன்! - திமுக வேட்பாளார் பேச்சால் பரபரப்பு!

Prasanth Karthick
வெள்ளி, 31 ஜனவரி 2025 (10:27 IST)

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் ‘இந்தியும், தமிழில் எங்களது உயிர்’ என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை ஆதரித்து வழங்கப்பட்ட துண்டு பிரசுரங்களில் இந்தியில் அச்சடிக்கப்பட்டிருந்தது வைரலானது.

 

இந்நிலையில் சமீபத்தில் அதுகுறித்து பேட்டியளித்த வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் “திமுகவின் கொள்கை என்றுமே இரு மொழிக் கொள்கைதான். அந்த இரு மொழிகள் ஆங்கிலமும், தமிழும்தான். நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம்.

 

லக்கி கோத்தாரி என்ற வட இந்தியாவை சேர்ந்தவர் நீண்ட காலமாக திமுகவில் இணைந்து பயணித்து வருகிறார். அவர் வட இந்திய தொழில் உரிமையாளர்களை அழைத்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக தனிப்பட்ட முறையில் இந்தியில் அச்சடித்த நோட்டீஸ்களை வழங்கியுள்ளார்.

 

இதுபோல இந்தி பேசுபவர்கள் வசிக்கும் இடங்களில் அவர்கள் மொழியில் நோட்டீஸ் கொடுப்பது வாடிக்கையான ஒன்றுதான். இந்தியில் திமுக சார்பில் நோட்டீஸ் அச்சடிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

 

மேலும் பேசுகையில், திமுகவின் இருமொழிக்கொள்கை இந்தியும், தமிழும்தான் எங்களுக்கு உயிர் என்று பேசினார். பின்னர் சுற்றி இருந்தவர்கள் சுட்டிக்காட்டியதும் ‘சாரி தவறாக சொல்லிவிட்டேன்’ என சொல்லி “தமிழும் ஆங்கிலமும்தான் உயிர்” என்று பேசியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments