Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழலை செல்வங்களுக்கு அடிப்படை உரிமை: தவெக தலைவர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்து..!

Mahendran
வியாழன், 14 நவம்பர் 2024 (13:37 IST)
மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமை தர பாடுபடுவோம் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியா முழுவதும் நவம்பர் 14 குழந்தைகள் தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி உள்பட பலரும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சற்றுமுன் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது; அவர்களின் புன்னகை விலைமதிப்பற்றது. குழந்தைகளின் மனது பொறாமை, பழிவாங்குதல், ஏமாற்றுதல் போன்ற எந்த ஒரு தீய எண்ணத்தையும் கொண்டிடாமல், தெளிந்த நீரைப் போல் பரிசுத்தமானது.

நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிய இந்த குழந்தைகள் தினத்தில் உறுதி ஏற்போம். குழந்தைகளை எந்நாளும் பாதுகாத்து, போற்றி மகிழ்வோம். இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments