Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியை பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது!

மூதாட்டியை பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது!

Webdunia
வியாழன், 11 மே 2017 (18:04 IST)
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சிறுவர்கள் கும்பல் ஒன்று தனியாக செல்லும் பெண்களை கடத்தி குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு சென்று அவர்களை பலாத்காரம் செய்த வழக்கில் தற்போது மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.


 
 
அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் தனியாக வந்து கொண்டிருந்தபோது கண்ணுப் பொத்தை காட்டுப்பகுதிக்கு சிலரால் கடத்தப்பட்டார். அங்கு அவர்கள் அந்த 63 வயதான பெண்ணை பலாத்காரம் செய்து பின்னர் தனது நண்பர்கள் சிலரையும் வரவழைத்து கும்பலாக சீரழித்துள்ளனர்.
 
63 வயதான அந்த மூதாட்டியை பலாத்காரம் செய்து பின்னர் தலையில் கல்லைப் போட்டு கொன்றுள்ளனர் அவர்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். தலைமைறைவாக இருந்த மீதமுள்ள 4 பேரை தீவிரமாக தேடிவந்தனர் போலீசார்.
 
முதலில் கைது செய்யப்பட்ட சிறுவனிடம் நடத்திய விசாரணயில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. தனியாக பெண் யாராவது சிக்கினால் அவர்களை கடத்தி அதே கண்ணுப் பொத்தை பகுதிக்கு கொண்டு வந்து பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து வந்துள்ளது இந்த கும்பல்.
 
இவர்களின் இந்த வெறிச்செயலுக்கு இதுவரை 6 பெண்கள் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கும்பலில் உள்ள மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்டுள்ள 2 சிறுவர்களையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் போலீசார்.

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments