Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு திடீரென பரவும் மர்ம காய்ச்சல்: நெல்லை மருத்துவமனையில் பரபரப்பு..!

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (18:09 IST)
நெல்லை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு திடீரென மர்ம காய்ச்சல் பரவி வருவதை அடுத்து நெல்லை மருத்துவமனைகளில் குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக திடீரென மர்ம காய்ச்சல் குழந்தைகளுக்கு பரவி வருவதாகவும் இதனால் நெல்லை, தென்காசி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இதுவரை 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனை அடுத்து அந்த பகுதியில் சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி டெங்கு காய்ச்சலும் அந்த பகுதியில் அதிக அளவு பரவி வருவதாக கூறியுள்ள பொதுமக்கள் அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments