Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கிராமியக் கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு..!

Advertiesment
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா'  கிராமியக் கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு..!

Mahendran

, புதன், 15 ஜனவரி 2025 (10:53 IST)
'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா'  கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 என உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுக்கு இணங்க  தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா'  நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை ஜன. 13 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வைத்தார்.
 
சென்னையில்  உள்ள 18   இடங்களில் நான்கு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. .இதையும் படிக்க: ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதை வென்றார் பும்ரா!சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
 
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது .இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். 
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரியாரை எதிர்த்ததற்காக சீமானை பாராட்டுகிறேன்.. துக்ளக் விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி..!