Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செய்தியாளர் முத்துக்குமாரின் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (14:38 IST)
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் முத்துக்குமாரின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’திருநெல்வேலியில் 30 ஆண்டுகளாக பல்வேறு ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி, தற்போது பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்டசெய்தியாளராகப் பணியாற்றி வந்த திரு. முத்துக்குமார் அவர்கள் நேற்றிரவுகங்கைகொண்டான் பகுதியில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தாழையூத்து அருகே நாய் ஒன்று குறுக்கே வந்ததால், அவர் நிலை தடுமாறி, சாலையில் விழுந்து, படுகாயமடைந்து, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் என்ற துயர செய்தியினை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன்.

சாலை விபத்தில் உயிரிழந்த திரு. முத்துக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 இலட்சம் ரூபாய் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சில கேள்விகளால் சாட் ஜிபிடிக்கும் பதற்றம் ஏற்படும்: ஆய்வாளர்கள் தகவல்..!

ஏர்டெல் - ஸ்டார்லிங்க் ஒப்பந்தம்.. இந்தியாவுக்கு வருகிறது புதிய டெக்னாலஜி..!

டீப்சீக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்: காங்கிரஸ் எம்பி கோரிக்கை..!

சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள்.. மின்சார ரயில்கள் ஓடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments