Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் மாரிமுத்து மறைவுக்கு முதல்வர் இரங்கல்

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (17:38 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து இன்று மாரடைப்பால் அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பசுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், சினிமாவின் ராஜ்கிரணிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன்பின்னர். மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.

அதன்பின்னர், கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் மிஷ்கின் இவரை யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து, நிமிர்ந்து நில், கொபம்பல், மருது ஆகிய படங்களில் நடிகராக முத்திரை பதித்தார்.

சினிமாவில் மட்டுமின்றி, சின்னத்திரையிலும் நடித்து வந்த நிலையில், நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலை காலமானார்.  அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ’’இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைதேன். அவரது மறைவு தமிழ்திரையுலகிற்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். மாரிமுத்துவை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை கூறிக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments