Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் மழை – மகிழ்ச்சி செய்தி !

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (17:29 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளது.

தென் மேற்குப் பருவமழைக் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்மழைப் பெய்து வருகிறது. நீலகிரி, வேலூர் ஆகியப் பகுதிகளில் வரலாறு காணாத மழைப் பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த வாரத்தில் ஆங்காங்கே மழைப் பெய்தது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களிலும், சென்னை உள்பட வட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும். வளிமண்டல சுழற்சி காரணமாக ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்யும்’ எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடு கட்டுறதா சொன்னாங்க.. கடைசில பாத்தா டாஸ்மாக்! - மக்களுக்கே விபூதி அடித்த அதிகாரிகள்!

வக்பு மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர்வோம்: சட்டமன்றத்தில் முதல்வர் பேச்சு..!

நான் செத்துட்டேன்னு யார் சொன்னது? வீடியோவில் வந்து ஷாக் கொடுத்த நித்யானந்தா!

இன்று திடீரென மீண்டும் சரியும் சென்செக்ஸ், நிப்டி.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ரூ.70,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 400 ரூபாய் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments