Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்து ஊழியர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை! – சென்னை மாநகர போக்குவரத்து!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (12:35 IST)
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கட்சி சார்ந்த தேர்தல் பணிகளில் ஈடுபட கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் சார்பாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சிலர் பணிபுரிய உள்ளனர். அவர்கள் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் வருவதால் தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை தவிர கட்சிகளுக்கு எந்த விதமான உதவிகளும் செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் பணியில் இல்லாத அரசு ஊழியர்களும் தேர்தல் பிரச்சாரம், வாக்குச்சாவடி அருகே கட்சி சார்பான விளக்கமளித்தல் போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் எனவும், அவ்வாறு ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments