Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்து: கட்டணம் எவ்வளவு?

Advertiesment
sabarimala
, திங்கள், 14 நவம்பர் 2022 (09:28 IST)
சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்து அறிவித்துள்ள தமிழக போக்குவரத்து துறை அதற்கான கட்டணம் எவ்வளவு என்பதையும் அறிவித்துள்ளது. 
 
இன்னும் ஒரு வாரத்தில் கார்த்திகை மாதம் பிறக்க உள்ளதை அடுத்து சபரிமலைக்கு மாலை அணிந்து கோயிலுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சென்னையில் இருந்து பம்பை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னையில் இருந்து பம்பைக்குநவம்பர் 17ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது
 
இந்த பேருந்தில் பெரியவர்களுக்கு ரூ.1090 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
 
சபரிமலைக்கு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளதால் சபரிமலை பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துருக்கியில் தற்கொலைப்படை தாக்குதல்; இந்த அமைப்பின் சதி வேலையா?